ஹீரோ அவதாரம் எடுக்கும் இயக்குநர் ராம்கோபால் வர்மா ?
இயக்குனர் ராம் கோபால் வர்மா கோலிவுட்டில் வலம் வரும் இவர். விரைவில் ஹீரோவாக அவதாரம் எடுக்கப்போவதாக தகவல் வெளியாகி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரை உலகில் தனது சினிமா பயணத்தை ராம்கோபால் வர்மா துவங்கினார். அதன் பிறகு கோலிவுட்டில் பெரிய ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார். தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்பட பல்வேறு விருதுகளை ராம்கோபால் வர்மா பெற்றுள்ளார். நான்கு முறை நந்தினி விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
ராமகோபால் வர்மா ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு "ஷோமேன்" எனப்பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரஜினியின் சிவாஜி படத்தில் வில்லனாக நடித்த சுமன். இந்த படத்திலும் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.
ஆர்.ஜி.வி உடன் இணைந்து 'ஐஸ்கிரீம்-1, ஐஸ்கிரீம்-2' போன்ற படங்களை தயாரித்த தும்மலப்பள்ளி ராமசத்யநாராயணா ராமகோபால் வர்மா ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிப்பதாக சொல்லப்படுகிறது.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தின் டிரெய்லரை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருவதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது முற்றிலும் பொய் என்றும் ஏஐ-யால் உருவாக்கப்பட்டது என்றும் ராம் கோபால் வர்மா மறுத்துள்ளார்.
What's Your Reaction?

