This Week OTT Release: சைரன், ரணம் முதல் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள்

ஏப்ரல் 19ம் தேதி ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

Apr 18, 2024 - 16:47
This Week OTT Release: சைரன், ரணம் முதல் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள்

சென்னை: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 16ம் தேதி ரிலீஸான சைரன் திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. ஆக்‌ஷன் ஜானரில் உருவான இந்தப் படத்தை அந்தோணி பாக்யராஜ் இயக்கியிருந்தார். இந்நிலையில் சைரன் திரைப்படம் ஏப்ரல் 19ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. திரையரங்குகளில் வெளியாகி இரண்டு மாதங்களுக்குப் பின்னர் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாவதால், சைரன் படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.  

அதேபோல், வைபவ் நடிப்பில் கடந்த பிப்ரவரில் ரிலீஸான ரணம் திரைப்படம் நாளை முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் ரணம் படத்துக்கு ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதுதவிர தமிழில் சமுத்திரகனி நடித்த யாவரும் வல்லவரே திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது.  

தெலுங்கு ரசிகர்களுக்கு சாகு, ஜென், மை டியர் டோங்கா ஆகிய படங்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. வினய் ரத்னம் இயக்கத்தில் உருவான இந்தப் படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜென் என்ற திரைப்படம் ETV win தளத்திலும், மை டியர் டோங்கா ஆஹா தளத்திலும் வெளியாகின்றன. மலையாளத்தில் நீல ராத்திரி என்ற திரைப்படம் Saina Play ஓடிடியில் நாளை வெளியாகிறது.  

இந்தியில் ரோஹித் மிட்டல் இயக்கிய டீமொன்ஸ், சைலன்ஸ் 2 படங்கள் ஜீ 5 ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. ஆர்ட்டிகள் 370 ஜியோ சினிமாவிலும், ஆல் இந்தியா ரேங் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளங்களிலும் வெளியாகின்றன. See You in Another Life என்ற ஸ்பானிஷ் வெப் சீரிஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. The Grimm Variations என்ற ஜப்பானிய வெப் சீரிஸ், The Circle சீசன் 6, Our Living World சீரிஸ், Rebel Moon Part Two ஆகியவை  நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow