Aadujeevitham Review: “ஆஸ்காரே கொடுக்கலாம்… ஆனா ஒன்னு..” ஆடுஜீவிதம் Public Review!
பிருத்விராஜ் நடித்துள்ள ஆடுஜீவிதம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
பிருத்விராஜ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆடுஜீவிதம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மலையாளத்தில் உருவான ஆடுஜீவிதம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளிலும் ரிலீஸானதால் பான் இந்தியா அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பிளெஸ்ஸி இயக்கியுள்ள இந்தப் படம் நஜீப் என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தின் பின்னணி என்பது குறிப்பிடத்தக்கது. அரபு நாட்டிற்கு வேலைக்கு செல்லும் நஜீப் ஏமாற்றப்பட்டு பாலைவனத்தில் சிக்கி உயிருக்குப் போராடுகிறார். பின்னர் எப்படி மீண்டு வந்தார் என்பது ‘ஆடுஜீவிதம்’ என்ற நாவலாக வெளிவந்தது.
இதுவே தற்போது பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்து ஆடுஜீவிதம் திரைப்படமாக வெளியாகியுள்ளது. சுமார் 16 ஆண்டுகளாக திட்டமிடப்பட்டு, 6 ஆண்டுகள் ஷூட்டிங் முடிந்து வெளியான ஆடுஜீவிதம் விஷுவல் ட்ரீட்டாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். தனுஷின் மரியான் படம் மாதிரி இதுவும் சர்வைவல் ட்ராமா எனவும், ரன்னிங் டைம் தான் கொஞ்சம் அதிகம் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம் மரியானுக்கும் ஆடுஜீவிதத்துக்கும் சம்பந்தமே இல்லையென்றும், இப்படத்தின் மேக்கிங் ஃபர்ஸ்ட் க்ளாஸ் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பிருத்விராஜ்ஜின் நடிப்பும், இந்த கேரக்டருக்காக அவர் பட்ட கஷ்டமும் தேசிய விருது வாங்கிக் கொடுக்கும் என பாராட்டியுள்ள ரசிகர்கள், ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை, சினிமோட்டோகிராபி, சவுண்ட் மிக்ஸிங் ஆகியவை தரமான சம்பவம் என்றுள்ளனர். மலையாளத்தில் வெளியான இன்னொரு உலக சினிமாவான ஆடுஜீவிதம் படத்துக்கு ஆஸ்கர் விருது கூட கொடுக்கலாம் என்பதும் ரசிகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
பிரேமலு, பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் படங்களைத் தொடர்ந்து ஆடுஜீவிதமும் சேட்டன்களின் மாஸ்டர் க்ளாஸ் மூவி என தமிழ் ரசிகர்கள் பாராட்டியுள்ளதால் இந்த வாரம் பிருத்விராஜ் தான் டாக் ஆஃப் தி ஆடியன்ஸ் என எதிர்பார்க்கலாம். முன்னதாக இந்தப் படத்தை உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட திரை பிரபலங்களும் பாராட்டியிருந்தனர்.
What's Your Reaction?