லேடீஸ் ஹாப்பி அண்ணாச்சி : தங்கம் விலை அதிரடி குறைவு 

வார தொடக்க நாளே தங்கத்தின் விலை சரிந்துள்ளது. இது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

லேடீஸ் ஹாப்பி அண்ணாச்சி : தங்கம் விலை அதிரடி குறைவு 
தங்கம் விலை அதிரடி குறைவு 

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை உயர்ந்து, சவரன் 1 லட்ச ரூபாயை தாண்டி விற்பனை ஆகிவருகிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக தங்கம் சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில், மீண்டும் தங்கத்தின் விலை உயர தொடங்கி உள்ளது. 

கடந்த சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,06,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 35 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow