மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 400 உயர்வு

தங்கம், வெள்ளி மீண்டும் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்க ரூ.400 விலை உயர்ந்து, முதலீட்டாளர், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 400 உயர்வு
Gold prices rise again

நேற்று தங்கம் விலை சற்று சரிவை சந்தித்தது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் சற்று குறைந்திருந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி நேற்று ரூ.4,000 குறைந்து, ரூ.3,06,000-க்கும், கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.306-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.4,000 அதிகரித்து, ரூ.3,10,000-க்கும், கிராமுக்கு ரூ.4 அதிகரித்து. ஒரு கிராம் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீண்டும் தங்கம், வெள்ளி விலை உயர்வு முதலீட்டாளர்கள், நகைப்பிரியர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow