மின் இணைப்பை தவறாக பயன்படுத்திய மேயர்: வீட்டுக்கு கரெண்ட் கட் : மின்வாரியம் அதிரடி
கட்டுமான பணிக்கு வீட்டு மின் இணைப்பை தவறாக பயன்படுத்தியதற்காக திருப்பூர் மேயருக்கு அபாரதம் விதித்ததோடு, மின் இணைப்பையும் வாரியம் துண்டித்துள்ளது.
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார். இவரது வீடு காங்கயம் ரோடு, புதுார் ரோடு பகுதியில் உள்ளது. தற்போது அங்கு ஒரு பகுதியில் வீடு விரிவாக்கம் செய்யும் வகையில் கட்டுமானப் பணி நடக்கிறது. இந்த கட்டுமானப் பணிக்கு வீட்டு மின் இணைப்பை பயன்படுத்துவதாக மின் வாரிய பறக்கும் படையினருக்கு தகவல் சென்றது.
இதையடுத்து அங்கு நேற்று மின் வாரிய பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். வீட்டு மின் இணைப்பில் கட்டுமானப் பணி நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த முறைகேட்டுக்கு 42,500 ரூபாய் அபராதம் விதித்து அந்த மின் இணைப்பை மின் வாரியத்தினர் துண்டித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரின் வீடு காங்கயம் ரோடு, புதுார் ரோடு பகுதியில் இருக்கிறது. தற்போது அங்கு ஒரு பகுதியில் வீடு விரிவாக்கம் செய்யும் வகையில் கட்டுமானப் பணியை தினேஷ்குமார் நடத்தி வருகிறாராம். இதற்காக கட்டுமானப் பணி நடக்கும் பகுதியில் வீட்டு மின் இணைப்பை ஒப்படைத்து விட்டு, தற்காலிக மின் இணைப்பு பெற கடந்த மாதம் விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது.
தற்காலிக மின் இணைப்புக்கான டிபாசிட் தொகை செலுத்தாமல் அந்த மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டுமானப் பணிக்கு வீட்டு மின் இணைப்பை பயன்படுத்துவதாக மின் வாரிய பறக்கும் படையினருக்கு தகவல் சென்றது. இதையடுத்து அங்கு நேற்று மின் வாரிய பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர்.
வீட்டு மின் இணைப்பில் கட்டுமானப் பணி நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இந்த முறைகேட்டுக்கு 42,500 ரூபாய் அபராதம் விதித்து அந்த மின் இணைப்பை மின் வாரியத்தினர் துண்டித்தனர். மின்வாரிய அதிகாரிகளின் நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

