வேட்பாளர் பணம் கொடுக்கும் வீடியோவை மக்களே தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பலாம்!

தேர்தலின் போது வேட்பாளர்கள் பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்தால், அதை பொதுமக்கள் வீடியோ எடுத்து தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் (cVIGIL) ஆப் மூலம் எங்களுக்கு அனுப்பி உதவ வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.

Mar 7, 2024 - 17:12
வேட்பாளர் பணம் கொடுக்கும் வீடியோவை மக்களே தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பலாம்!

தேர்தலின் போது வேட்பாளர்கள் பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்தால், அதை பொதுமக்கள் வீடியோ எடுத்து தேர்தல் ஆணையத்தின் சி-விஜில் (cVIGIL) ஆப் மூலம் எங்களுக்கு அனுப்பி உதவ வேண்டும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. வேட்பாளர்கள் செய்யும் அத்துமீறல்களை பொதுமக்கள் கண்காணிக்க ஆணையத்திற்கு தெரியப்படுத்துவது எப்படி என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கினார். வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பரிசு பொருள், பணம் கொடுப்பது பற்றியும் செல்போனில் வீடியோ அல்லது புகைப்படம் எடுத்தும் சி-விஜில் செயலி மூலம் பொதுமக்கள் புகார் அனுப்பலாம். சி-விஜில் செயலி மூலமாக பொது மக்கள் யார் வேண்டுமானாலும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளிக்கலாம்.

புகார் அளிப்பவர் குறித்த விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும், அந்தப் பதிவில் எந்த இடத்தில் வீடியோ எடுக்கப்பட்டது, நேரம், தேதி அனைத்தும் பதிவாகிவிடும். அதை ஆதாரமாக வைத்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும். தேர்தல் விதிமீறல் புகார்களை யார் விசாரிக்க வேண்டும்? என்பதை அறிய காவல்துறை, வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, மாவட்ட அளவிலான அதிகாரிகளை ஒருங்கிணைத்து செயல்படும் வகையில் இ.எம்.எஸ். உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனுதாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். அதை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். அதை ஆன்லைன் மூலமாகவோ, தேர்தல் அலுவலகத்துக்கு நேரில் சென்றோ விண்ணப்பிக்கலாம்.

அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைவசம் இருக்கின்றன. கூடுதலாக 20 சதவீதம் அளவுக்கு இயந்திரகள் இருக்கின்றன. தேர்தல் பணிக்கான அலுவலர்கள், அதிகாரிகளையும் தயார்படுத்திவிட்டோம், தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளோம்.

அதேபோல், தேர்தலுக்காக பேலட் யூனிட் 1 லட்சத்து 70 ஆயிரமும், கண்ட்ரோல் யூனிட் 93 ஆயிரமும், விவிபேட் 99 ஆயிரமும் இருக்கிறது. சில தொகுதிகளில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் போது 2 இயந்திரம் வைக்க வேண்டி இருக்கும். அதற்கும் தேவையான மின்னணு இயந்திரங்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow