விண்ணை தொடும் முட்டை விலை உயர்வு: இனி ஆம்லெட், ஆஃபாயில் குட்பை
தமிழகத்தில் தற்போது வரலாறு காணாத அளவில் விலை உயர்வை சந்தித்து வருகிறது. குறிப்பாக நாமக்கல் முட்டை சந்தையில், கடந்த 55 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாமல், ஹோட்டல்கள், பேக்கரிகள், சிற்றுண்டி கடைகள் என அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருவதுடன், சுமார் 7 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சராசரியாக 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல மாவட்டங்கள் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) மேற்கொண்ட விலை மதிப்பீட்டில், முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.6.15 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி தாக்கமாக, சில்லறை சந்தையில் ஒரு முட்டையின் விலை ரூ.7 முதல் ரூ.7.50 வரை விற்பனை செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இன்று மேலும் 5 காசுகள் உயர்ந்து 6.20 ரூபாய் முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை விரைவில் 10 ரூபாய் எட்டும் என சொல்லப்படுகிறது.
What's Your Reaction?

