கேப்டன் நினைவிடத்தில் உதவி கேட்ட தாய்... KPY பாலாவின் நெகிழ்ச்சியான செயல்... ச்சே... கண்ணே கலங்குதுங்க!!
கேப்டன் நினைவிடத்தில் தனது மகனின் படிப்புக்காக உதவி கேட்ட தாய்க்கு, சற்றும் யோசிக்காமல் தன்னிடம் இருந்த பணத்தை அள்ளிக்கொடுத்த KPY பாலாவின் செயல், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் KPY பாலா. தற்போது, சின்னத்திரையில், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார்.
சமூக சேவையில் அதிகம் ஆர்வம் கொண்ட அவர், மாணவர்களின் கல்வி மற்றும் மக்களின் மருத்துவம் தொடர்பான பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக, மலைவாழ் மக்களுக்காக ஆம்புலன்சும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான இலவச ஆட்டோவையும் வழங்கினார். சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தான் சேமித்து வைத்திருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை ஆயிரம் ஆயிரமாக பிரித்து, நேரடியாக சென்று வழங்கினார். பாலாவின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக மக்களிடம் மிகுந்த வரவேற்பும் கிடைத்தது.
இந்த நிலையில், நார்வேயில் நடைபெற்ற 15வது பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில், கொடுத்து கொடுத்து சிவந்த கரம் எனப் போற்றப்படும், புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் பெயரிலான விருது, KPY பாலாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதுடன், சென்னை கோயம்பேட்டில் உள்ள, தேமுதிக அலுவலகத்திற்கு சென்ற பாலா, கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, தான் பெற்ற விருதை கேப்டன் பாதத்தில் வைத்து வணங்கினார்.
அப்போது, அங்கு வந்த மாணவரின் தாய் ஒருவர், தனது மகன் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டு, 11ஆம் வகுப்புக்கு படிக்க உள்ளதாகவும், ஆனால், அதற்கு கல்வி கட்டணம் செலுத்துவதற்கு பணம் இல்லை என கூறியுள்ளார். கேப்டன் இருந்திருந்தா அவரிடம் நேரில் கேட்டு இருப்பேன், நீங்களும் அனைவருக்கும் உதவி செய்றீங்க என்னோட மகன் படிக்கவும் உதவி பண்ணுங்க என கேட்டு, மகனின் சான்றிதழ்களையும் காட்டியுள்ளார்.
அப்போது சற்றும் தாமதிக்காத KPY பாலா, தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும், அந்த சிறுவனுக்கு கொடுத்துவிட்டு, நல்லா படிக்கனும் தம்பி என அவரை தட்டிக்கொடுத்தார். இதனை பார்த்த தாய் கண்ணீர் மல்க பாலாவுக்கு நன்றிகளை கூறினார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பாலாவுக்கு நெட்டிசன்களும் பொதுமக்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?