Nivetha Pethuraj: “கார் டிக்கியை திறக்க முடியாது..” போலீஸாருடன் மல்லுக் கட்டிய நிவேதா பெத்துராஜ்!

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது கார் டிக்கியை திறக்க முடியாது எனக் கூறி போலீஸாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

May 30, 2024 - 17:56
Nivetha Pethuraj: “கார் டிக்கியை திறக்க முடியாது..” போலீஸாருடன் மல்லுக் கட்டிய நிவேதா பெத்துராஜ்!

சென்னை: ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியாக வலம் வரும் நிவேதா பெத்துராஜ், பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத் தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நிவேதா பெத்துராஜ்ஜுக்கு துபாயில் வீடு இருப்பதாக வெளியான தகவல் திரையுலகையே அதிர வைத்தது. அதுமட்டும் இல்லாமல் நிவேதா பெத்துராஜ்ஜுக்கு துபாயில் வீடு வாங்கிக் கொடுத்தது உதயநிதி தான் என்றும் தகவல்கள் வெளியாகின. 

ஆனால், அப்படியொன்றும் கிடையாது, இதெல்லாம் ஆதாரம் இல்லாத கட்டுக் கதைகள் என நிவேதா பெத்துராஜ் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள நிவேதா பெத்துராஜ்ஜின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. அதில், காரில் செல்லும் நிவேதா பெத்துராஜ்ஜை போலீஸார் சோதனைக்காக நிறுத்துகின்றனர். மேலும், காரின் டிக்கியை திறந்து காட்டுங்க மேடம் எனவும், இது புரோட்டோகால் என்றும் தன்மையாகக் கூறுகின்றனர். ஆனால், காரில் பேப்பர் எல்லாம் சரியாக இருக்கிறது என சொல்லும் நிவேதா பெத்துராஜ், டிக்கியை திறந்து காட்ட முடியாது என மறுக்கிறார். 

இருப்பினும் நிவேதா பெத்துராஜ்ஜிடம் மீண்டும் கார் டிக்கியை திறந்து காட்டுங்கள் என போலீஸார் கேட்க, அவரோ அதெல்லாம் முடியாது, இது கொஞ்சம் பெரிய இடத்து சமாச்சாரம் என சீக்ரெட்டாக பேசுகிறார். அதோடு இந்தச் சம்பவத்தை போலீஸார் வீடியோவாக ரெக்கார்ட் செய்துகொண்டிருப்பதை பார்த்த நிவேதா பெத்துராஜ், காரில் இருந்துகொண்டே கேமராவை தட்டி விடுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு, நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். போலீஸாருக்கு மரியாதை இல்லாமல் டிக்கியையும் திறக்க முடியாது என எந்த தைரியத்தில் நிவேதா பெத்துராஜ் கூறுகிறார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

போலீஸாரும் நிவேதா பெத்துராஜ்ஜும் தெலுங்கில் பேசிக் கொள்வதால், இது ஆந்திரா அல்லது தெலங்கானாவில் நடந்த சம்பவம் என சொல்லப்படுகிறது. மேலும், இந்த வீடியோவின் பின்னணி குறித்தும் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே நிவேதா பெத்துராஜ் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் நடைமுறையில் இருப்பதால், நிவேதா பெத்துராஜ் கார் டிக்கியை திறக்க மறுப்பதற்கு ஏதேனும் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow