Good Bad Ugly: அஜித்துக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்... குட் பேட் அக்லியில் இணையும் பிரேமலு பிரபலம்?
குட் பேட் அக்லி படத்தில் அஜித் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஐதாராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் யார் யாரெல்லாம் நடிக்கின்றனர் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரம் குட் பேட் அக்லி படத்தில் அஜித் மூன்று கேரக்டர்களில் நடிப்பது மட்டும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் அஜித் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித்துக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?
ரஜினிக்கு தங்கையாக நடித்துவிட்ட கீர்த்தி சுரேஷ், விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம், தனுஷ் ஆகியோருடன் டூயட் பாடி விட்டார். ஆனால், இதுவரை அஜித்துடன் நடிக்காத கீர்த்தி சுரேஷுக்கு, குட் பேட் அக்லி திரைப்படம் மூலம் அந்த சான்ஸ் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லியில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு. இதனால் விரைவில் இதுபற்றி அபிஸியலாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தில் கீர்த்தி சுரேஷ் மட்டுமில்லாமல் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோரும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குட் பேட் அக்லியில் பிரேமலு பிரபலம்
அதேபோல், குட் பேட் அக்லியில் பிரேமலு படத்தின் ஹீரோ நஸ்லென் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. கேரளா மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரேமலு, பாக்ஸ் ஆபிஸில் 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த நஸ்லென், நாயகி மமிதா பைஜூ இருவருக்கும் ரசிகர்களிடம் செம்ம கிரேஸ் உள்ளது. இந்நிலையில், அஜித்தின் குட் பேட் அக்லியில் பிரேமலு ஹீரோ நஸ்லென்னை புக் செய்துள்ளாராம் ஆதிக் ரவிச்சந்திரன்.
அபிஸியல் அப்டேட் எப்போது?
கடந்தாண்டு வெளியான லியோ படத்தில் மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் விஜய்யின் மகனாக நடித்திருந்தார். மேத்யூ தாமஸின் நண்பரான நஸ்லென் அஜித்துடன் குட் பேட் அக்லியில் நடிக்கவுள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் இதுபற்றி இதுவரை அபிஸியலாக அப்டேட் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்று வந்த குட் பேட் அக்லி படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் ஜூன் மாதம் விடாமுயற்சி படத்தின் மீதமுள்ள போர்ஷனையும் நடித்து கொடுக்க அஜித் ரெடியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
What's Your Reaction?