"இதுக்கு எண்டே கிடையாதா?" தங்கம் சவரனுக்கு ரூ.1440 உயர்வு
வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1440 உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நாள்தோறும் மாற்றி அமைக்கப்படும் விலை மாற்றத்தால் தற்போது சவரனுக்கு ரூ 1 லட்சத்தை தாண்டி தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வாரத்தின் கடைசி நாளான சனிக்கிழமை தங்கம் சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.260 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,680-க்கு விற்னை ஆனது.
வெள்ளியை பொறுத்தவரை சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் சவரனுக்கு ரூ.1440 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.180 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,860-க்கு விற்பனை ஆகிறது.
இதே போன்று வெள்ளியும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?

