இந்தியன் பாஸ்போர்ட்டா.. அய்யோ சுத்த வேஸ்ட்: புலம்பித் தள்ளும் இன்ஸ்டா பிரபலம்
இந்திய பாஸ்போர்ட்-க்கு மதிப்பே இல்லை என டிராவல் இன்ஸ்டா பிரபலம் புலம்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. எதற்காக அவர் இப்படி சொன்னார்? உண்மையில் மற்ற நாடுகள் இந்தியர்களின் பாஸ்போர்ட்டுக்கு தரும் மதிப்பென்ன என்பதை இந்த பகுதியில் காணலாம்.

'ஆன் ரோடு இந்தியன்' என்கிற இன்ஸ்டா பக்கம், பயண விரும்பிகளுக்கு நல்ல பரீட்சையம். பல்வேறு நாடுகளுக்கு பயணிப்பதை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அண்மையில் இவர் ஜோர்டனுக்கு சென்றிருந்த போது, இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய பாஸ்போர்ட் குறித்து ஆதங்கமாக பேசும் வீடியோ ஒன்றினை பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ 2 நாட்களில் 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.
என்னிடம் இருக்கும் இந்த விஷயம், இதற்கு எந்த மதிப்பும் இல்லை (இந்திய பாஸ்போர்ட்). தாய்லாந்து, மலேசியா, இலங்கையை நினைத்து மகிழ்ச்சியடைய வேண்டாம். சில முக்கிய நாடுகளில் நமது இந்திய பாஸ்போர்ட்-க்கு மதிப்பில்லை.விசா தொடர்பான பிரச்சனைகளால் மட்டுமே என்னால் ஜோர்டானுக்கு பயணிக்க முடியவில்லை. என்னிடம் பணம் இருக்கிறது. எல்லா ஆவணங்களும் என்னிடம் உள்ளன. எனது பயண வரலாறு சிறப்பாக உள்ளது. ஆனாலும், அவர்கள் எனது பாஸ்போர்ட்டைப் பார்க்கும்போது, என்னைச் சரிபார்க்கிறார்கள். சில நேரங்களில் அவர்கள் என்னை நாட்டிற்குள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கிறார்கள்,"
”எகிப்து போன்ற நாடுகள் இந்தியர்கள் என்றால் ஒரு அழைப்பிதழ் கடிதத்தை (invitation letter) கேட்கிறார்கள். சீனாவில் கூட, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு 24 மணி நேரம் மட்டுமே விசா இல்லாத போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது, அதே நேரத்தில் மற்ற நாடுகளின் குடிமக்கள் 10 நாட்களுக்கு விசா இல்லாமல் சீனாவிற்குள் பயணிக்க முடியும்.” என மொத்த ஆதங்கத்தையும் வீடியோவில் கொட்டித் தீர்த்துள்ளார்.
பாஸ்போர்ட் குறியீடு: பின்னடைவில் இந்தியா
கடந்த ஆண்டு, ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்ட ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு பட்டியலில் இந்தியாவிற்கு 82-வது இடம் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. நோமட் கேபிடலிஸ்ட்டால் சமீபத்தில் 199 நாடுகளினை தரவரிசைப்படுத்தி உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட பட்டியலினை வெளியிட்டு இருந்தது. இதில் இந்தியா 148 வது இடத்தில் உள்ளது.
நோமட் கேபிடலிஸ்ட்டால் (Nomad Capitalist Passport Index 2025) பாஸ்போர்ட் குறியீட்டினை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மொத்தம் 199 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் பாஸ்போர்ட்டுக்கு 148 வது இடம் தான் கிடைத்துள்ளது. இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடான பாகிஸ்தான் 195வது இடத்திலும், நேபாளம் மற்றும் வங்கதேசம் முறையே 180-வது மற்றும் 181-வது இடத்திலும் உள்ளன. இலங்கை 168-வது இடத்தில் உள்ளது. ஆசிய துணைக்கண்டத்திற்குள் அங்கம் வகிக்கும் பூட்டான் 140-வது இடத்தில் உள்ளது.
5 முக்கிய காரணிகளின் அடிப்படையில் இந்த பாஸ்போர்ட் பட்டியலன் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 1.விசா இல்லாத பயணம், 2.வரி விதிப்பு, 3.இரட்டை குடியுரிமை, 4.உலகளாவிய பார்வை, 5.தனிப்பட்ட சுதந்திரம்
இந்தியர்களின் பாஸ்போர்ட்-க்கு மதிப்பு குறைந்து வருவது குறித்து பலரும் தங்கள் கருத்துகளை 'ஆன் ரோடு இந்தியன்' பதிவிட்ட வீடியோவில் கமெண்டாக பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram
What's Your Reaction?






