வேலை இல்லா இளைஞர்கள்தான் டார்கெட்...  போலி போலீஸ் காதல் ஜோடிக்கு காப்பு மாட்டிய நிஜ போலீஸ்...

வேலை இல்லா இளைஞர்களை குறிவைத்து ரயில்வே மற்றும் போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த போலி போலீஸ் காதல் ஜோடியை, நிஜ போலீசார் கைது செய்துள்ளனர்.

Mar 9, 2024 - 11:23

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஹனுமந்து ரமேஷ். இவர் சிஆர்பிஃஎப். பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சொந்த ஊரான பெந்துர்த்தியில் வசித்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் மற்றும் அவரது காதலி போலீஸ் எஸ்ஐ போன்று யூனிஃபாம் அணிந்து வலம் வந்து, வேலையில்லா இளைஞர்களை குறிவைத்து ரயில்வே மற்றும் போலீசில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை வாங்கி மோசடி செய்துள்ளனர்.
இந்த ஜோடி சுமார் 30 இளைஞர்களிடம் இருந்து ரூ.3 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும், பொம்மை துப்பாக்கியை வைத்து பலரை மிரட்டி மாமூல் வசூலித்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த போலி போலீஸ் காதல் ஜோடியை பார்த்து ஏமாந்த இளைஞர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் இருவரையும் தேடி வந்த போலீசார் ஹைதராபாத்தில் வைத்து கைது செய்தனர். மேலும், பொம்மை துப்பாக்கி வைத்து பலரை மிரட்டி பணம் பறித்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow