கேரள அரசின் ஒரு அறிவிப்பால் மகிழ்ச்சியில் திரண்ட மக்கள்....
இடுக்கி அணையை அனைத்து நாட்களிலும் பார்க்கலாம் என அரசு அனுமதி வழங்கிய நிலையில், அங்கு வனத்துறை சார்பில் சுற்றுலா படகு சேவை துவங்கியது. மக்கள் மகிழ்ச்சியில் அணைக்கு வர அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இடுக்கி அணையை அனைத்து நாட்களிலும் பார்க்கலாம் என அரசு அனுமதி வழங்கிய நிலையில், அங்கு வனத்துறை சார்பில் சுற்றுலா படகு சேவை துவங்கியது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடுக்கி அணை மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது. ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகையின்போது மட்டுமே இங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் அனைத்து நாட்களிலும் இந்த அணையைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து அரசு செப்டம்பர் 2-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தற்போது புதன் கிழமை மற்றும் தண்ணீர் திறக்கும் நாட்கள் தவிர்த்து அனைத்து நாட்களிலும் அணையை பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், கேரள அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டபோதே, சில நாட்களில் மக்களுக்கு அணைக்குள் அனுமதி இல்லை என அறிவித்தது.
அதாவது, கடும் மழைக்கான வானிலை முன்னெச்சரிக்கைகள் (ரெட் அலெர்ட், மஞ்சள் அலெர்ட், ஆரஞ்ச் அலெர்ட்) விடுக்கப்படும்போது, மக்களுக்கு அனுமதி இல்லை; அதேபோல், பேரிடர் மேலாண்மை ஆணையம் சுற்றுலாவுக்கு கட்டுப்பாடு விடுக்கும் நாட்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இடுக்கி அணையில் வனத்துறை சார்பிலான இடுக்கி வன வளர்ச்சி குழு தலைமையில் சுற்றுலா படகு சேவை துவங்கியது. முதற்கட்டமாக 18 இருக்கைகள் கொண்ட படகு இயக்கப்பட்ட நிலையில், அதேபோல், மேலும் இரண்டு படகுகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், அணைக்கு உட்பட்ட வெள்ளாபாறை படகு குழாமில் இருந்து படகு இயக்கப்படுகிறது. 30 நிமிடம் பயணத்தின் இடையே ஆர்ச் வடிவிலான இடுக்கி அணை, நேர் வடிவிலான செருதோணி அணை,வைசாலி குகை ஆகியவற்றை பார்த்து மகிழலாம். இதன் காரணமாக மக்கள் தங்களது குடும்பத்துடன் அணையைப் பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
What's Your Reaction?