Pushpa 2: புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி… அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ரெடியா..?

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Apr 24, 2024 - 17:57
Pushpa 2: புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி… அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ரெடியா..?

சென்னை: டோலிவுட்டில் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வேகமாக உருவாகி வருகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். வில்லனாக ஃபஹத் பாசில் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். புஷ்பா முதல் பாகத்தை போல அதே கூட்டணியில் புஷ்பா தி ரூல் உருவாகி வருகிறது. டோலிவுட் மட்டுமின்றி பான் இந்தியா ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புஷ்பா 2, ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகவுள்ளது. 

இதனையடுத்து அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷலாக டீசர் வெளியிட்டு சர்ப்ரைஸ் காட்டியது படக்குழு. அதன் தொடர்ச்சியாக புஷ்பா 2ம் பாகத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் உழைப்பாளர் தின ஸ்பெஷலாக மே 1ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகிறது. இந்த அப்டேட்டுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

”புஷ்பா புஷ்பா” என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடல் அல்லு அர்ஜுனின் இன்ட்ரோ சாங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா முதல் பாகத்தில் செம்மையான மியூசிக்கல் ட்ரீட் கொடுத்திருந்தார் தேவி ஸ்ரீ பிரசாந்த். ”சாமி சாமி”, “ஊ சொல்றீயா மாமா”, ”ஸ்ரீ வள்ளி” உட்பட வெரைட்டியாக 5 பாடல்களை கொடுத்த தேவி ஸ்ரீ பிரசாத், பின்னணி இசையிலும் மிரட்டியிருந்தார். இப்போது புஷ்பா 2ம் பாகத்திலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் சம்பவம் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் விஜய்யின் கோட் படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து மே 1ம் தேதி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக விடாமுயற்சி டீசர் அல்லது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக வாய்ப்புள்ளது. அதோடு அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகவிருப்பது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow