Kavin: “அடுத்த தளபதியா… சோலிய முடிச்சு விட்றாதீங்க..” கிரேட் எஸ்கேப்பான கவின்!
கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் மே 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் தளபதி விஜய் பற்றிய கேள்விக்கு கவின் சொன்ன பதில் வைரலாகி வருகிறது.
சென்னை: கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் கவின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. டாடா வெற்றியைத் தொடர்ந்து தற்போது இளன் இயக்கியுள்ள ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் வெளியான ஸ்டார் ட்ரெய்லர் படத்துக்கு தரமான ஹைப் கொடுத்திருந்தது. ஸ்டார் ரிலீஸாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அதில், கவின், இயக்குநர் இளன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று வருகின்றனர்.
அதேபோல் ஸ்டார் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பேசிய கவின், அவரது சினிமா கேரியர் பற்றியும் மனம் திறந்திருந்தார். முக்கியமாக விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரையும் தனது இன்ஸ்பிரேஷன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கவினிடம் தளபதி டை டில் பற்றி கேட்டதற்கு அவர் சொன்ன பதில் வைரலாகி வருகிறது.அதாவது விஜய் விரைவில் அரசியலுக்கு செல்லவிருப்பதால் அவர் சினிமாவில் இருந்து விலகுகிறார். இதனால் விஜய்யின் இடமும் அவரது தளபதி டைட்டிலும் யாருக்கு சொந்தம் என்ற விவாதம் நடக்கிறது.
முன்னதாக ரஜினியின் சூப்பர் ஸ்டார் டைட்டிலுக்கு விஜய் ரூட் போடுவதாக சொல்லப்பட்டது. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தொடங்கிய இந்த பஞ்சாயத்து, லியோ ப்ரோமோஷன் வரை நீடித்தது. இப்போது விஜய் சினிமாவில் இருந்து விலகவிருப்பதால் தளபதி டைட்டில் பஞ்சாயத்து தொடங்கியுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் தான் அடுத்த தளபதி என்ற ஒரு டாக் வைரலானது. இந்த ரேஸில் கவினையும் கோர்த்துவிட ஒரு கும்பலே ரெடியாகிவிட்டது.
அதன்படி, ஸ்டார் செய்தியாளர்கள் சந்திப்பில், “கவின் தான் அடுத்த தளபதின்னு சொல்றாங்க..” என கேள்வி எழுந்தது. இதனால் பதறிய் கவின், “ஐயா இது 12 வருச போராட்டம்ங்க… இந்த மாதிரி எதாவது ஒன்னு கேட்டு முடிச்சு விட்றாதீங்க..” எனக் கூறியபடி எஸ்கேப் ஆகிவிட்டார். இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் கவின், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் ஹீரோவாக கமிட்டாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?