சிவகாசியில் இளைஞர் வெட்டிக்கொலை.. 7 பேருக்கு ஆயுள் தண்டனை.. ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் அதிரடி

Apr 24, 2024 - 18:13
சிவகாசியில் இளைஞர் வெட்டிக்கொலை.. 7 பேருக்கு ஆயுள் தண்டனை.. ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் அதிரடி

சிவகாசி அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சேனையாபுரம் காலனியைச் சேர்ந்தவர் அரவிந்தன் என்ற பார்த்திபன். இவர் மீது 2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி அரவிந்தன், தனது நண்பர் துரைபாண்டியன் என்பவருடன்  எம்.கள்ளிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர்களை வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் அரவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். 
 
இந்தக் கொலை வழக்கில் ஆணையூர் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி நாராயணன், சிவகாசி முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த அருண்பாண்டியன், பார்த்திபன்,  முத்துக்கிருஷ்ணன், பாண்டியராஜன், மகேஸ்வரன், மதன்குமார், பழனிசெல்வம், நேருஜி நகரை சேர்ந்த மாரீஸ்வரன், இந்திரா நகரை சேர்ந்த மணிகண்டபிரபு, சிலோன் காலனியை சேர்ந்த ஹரிகுமார் மற்றும் பிரவீன், அந்தோணிராஜ், பொன்ராஜ், செளந்தர், ஜோதிலிங்கம் ஆகிய  16 பேரை எம்.புதுப்பட்டி போலீசார் கைது செய்தனர். 
 
இதையடுத்து வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அருண்பாண்டியன், பார்த்திபன், மதன்குமார், ஜோதிலிங்கம், பொன்ராஜ், மாரீஸ்வரன், பழனிசெல்வம் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.  மேலும், ஆணையூர் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி நாராயணன் உட்பட 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow