Paytm வாடிக்கையாளரா நீங்கள்? உங்களுக்கு ஓர் நற்செய்தி.. RBI கொடுத்த அவகாசம்..!
Paytm Payments வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த வங்கி சேவைகளை, பிப்ரவரி 29ஆம் தேதியுடன் நிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Paytm Payments வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த வங்கி சேவைகளை பிப்ரவரி 29-ஆம் தேதியுடன் நிறுத்த இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அதற்கான காலக்கெடுவை மார்ச் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், Paytm கணக்குகளில் பணம் செலுத்துவது, முன்கூட்டியே பணம் செலுத்துவது, கடன் பரிவர்த்தனைகள், உள்ளிட்ட சேவைகளை மார்ச் 15ஆம் தேதி வரை Paytm Payments வங்கி மேற்கொள்ளலாம் என கூறியுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குகளில் தொகை இருக்கும் வரை அதனை எடுக்கவும், பரிவர்த்தனை செய்யவும் முடியும் என தெரிவித்துள்ளது. அதற்கு Paytm Debit கார்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், மார்ச் 15ஆம் தேதிக்குபின், Paytm Payments வங்கி கணக்கில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடன் பரிவர்த்தனை மற்றும் வைப்பு நிதியை Paytm Payments வங்கி கணக்குகளில் மேற்கொள்ள முடியாது எனவும், வட்டி, Cashback, Refund உள்ளிட்டவை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து Paytm-ன் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா தனது எக்ஸ் தளப் பக்கத்தில்,"Paytm-ன் QR, Soundbox, கார்ட் இயந்திரம் மார்ச் 15-க்குப் பின், எப்போதும் போல இருக்கும். வதந்திகளை நம்ப வேண்டாம்" என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?