பேடிஎம் பணப் பரிவர்த்தனை தளத்தின் பெயர் மாற்றமா?
பேடிஎம் தளத்தின் பெயரை Pai-ஆகவும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பணப் பரிவர்த்தணை உள்ளிட்ட நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், பேடிஎம் நிறுவனம் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், வாடிக்கையாளர்களின் தகவல்கள் சரிபார்ப்பு முறைகளையும் மீறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து, பிப்ரவரி 29ம் தேதிக்குப் பிறகு, புதிதாக வைப்புத்தொகை செலுத்துதல், புதிய நிதி பரிமாற்றங்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் பதிவுசெய்தல் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்நிலையில், Paytm பணப் பரிவர்த்தனை தளம் Pai தளமாக மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிஜிட்டல் வலைப்பின்னல்கள் மூலம், பொருட்கள் மற்றும் சேவைகளை பரிமாற்றம் செய்வதில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ONDC-இன் ஸ்டார்ட்-அப் நிறுவனமான Bitsila-வை பேடிஎம் நிறுவனம் வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பேடிஎம் தளத்தின் பெயரை Pai-ஆக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இனிமேல் பணப்பரிவர்த்தனை வர்த்தகத்தை பேடிஎம் மற்றும் Bitsila ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து மேம்படுத்தும் எனத் தெரிகிறது. இந்த ஒப்பந்தங்கள் முடிவடைந்து விரைவில் செயல்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
What's Your Reaction?