என்னது நான் பேசுனது வதந்தியா? போலீஸ் விளக்கத்துக்கு கவுண்ட்டர் கொடுத்த பாக்யராஜ்..! புது வீடியோ!
நெஞ்சு பொறுக்குதில்லையே என மேட்டுப்பாளையத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட இயக்குநர் பாக்யராஜ் கூறுவது ஒரு வதந்தி எனக்கூறி காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் மீண்டும் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ், மேட்டுப்பாளையம் பத்தரகாளி அம்மன் கோயில் அருகே உள்ள அம்பரம்பாளையம் ஆற்றில் குளிக்க செல்பவர்களை சிலர் ஆற்றில் மூழ்கடித்து கொல்வதாகவும் அவர்களின் உடலை மீட்க பணம் பெருவதாகவும் கூறி நெஞ்சு பொறுக்குதில்லையே என வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், "பாக்யராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. அவர் கூறுவதைப்போல் எந்த சம்பவமும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. பத்ரகாளியம்மன் கோயில் அருகே உள்ள ஆற்றில் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் எவ்வித உயிரிழப்பு சம்பவமும் நடக்கவே இல்லை.பாக்கியராஜ் கூறுவது ஒரு வதந்தி" என விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் வதந்தி என்ற தலைப்பில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள பாக்கியராஜ், நெஞ்சம் பொறுக்குதில்லையே என்ற தலைப்பில் நான் கூறியது 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என பிறர் கூற தாம் அறிந்ததாகவும், அதில் காவல்துறையினரை எந்த விதத்திலும் ஈடுபடுத்தி பேசவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் காவல்துறை வதந்தி என கூறுவது தவறு, காவல்துறை அளித்துள்ள அறிக்கை கடந்த 2 ஆண்டுகளுக்கானது மட்டுமே.ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இது போன்ற நிகழ்வு செய்தி வாயிலாக வந்ததாக தனது ஊடக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவர்கள் தற்போதும் இருந்தால் அவர்களை கண்காணித்து குற்றங்களை தடுக்க வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் கூறியதாகவும் விளக்கம் கொடுத்துள்ளார்.
What's Your Reaction?