Raayan Release Date: ராயன் ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்த தனுஷ்... திணறும் தங்கலான்!

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Jun 11, 2024 - 11:10
Raayan Release Date: ராயன் ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்த தனுஷ்... திணறும் தங்கலான்!

சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோவான தனுஷ், பவர் பாண்டி திரைப்படம் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். 2017ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்கள் பெற்றது. அதன்பின்னர் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள தனுஷ், தனது 50வது படமான ராயன்-ஐ அவரே இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள ராயன் திரைப்படம் கேங்ஸ்டர் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ராயன் திரைப்படம் இந்த மாதம் 13ம் தேதி ரிலீஸாகும் என படக்குழு முதலில் அறிவித்திருந்தது. இதனையடுத்து இப்படத்தில் இருந்து ’அடங்காத அசுரன்’, ‘வாட்டர் பாக்கெட்’ என இரண்டு பாடல்களை படக்குழு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக ராயன் இசை வெளியீட்டு விழா நடைபெறலாம் என சொல்லப்பட்டது. அதேபோல், ராயன் படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்திருந்தார் தனுஷ். ஆனால், திடீரென ஜூன் ரிலீஸில் இருந்து பின்வாங்கிய ராயன், இப்போது ஜூலை வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது. அதன்படி இந்தப் படம் ஜூலை 26ம் தேதி ராயன் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஜூலை 28ம் தேதி தனுஷின் 40வது பிறந்தநாள் என்பதால், அதனை முன்னிட்டு ராயன் படத்தை ரிலீஸ் செய்ய பிளான் செய்யப்பட்டுள்ளதாம். இதனால் ராயன் இசை வெளியீட்டு விழா, ட்ரெய்லர் ரிலீஸ் ஆகியவையும் தள்ளிப் போகும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் ராயன் ரிலீஸுக்குப் பதிலாக, இந்த வாரம் விஜய் சேதுபதியின் மகாராஜா வரும் 14ம் தேதி வெளியாகிறது. ஜூலை 12ம் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 ரிலீஸாகிறது. அதனையடுத்து தனுஷின் ராயனும் அதே மாதம் வெளியாகவிருப்பது ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

இதனிடையே தனுஷின் ராயன் திரைப்படத்தால், சீயான் விக்ரமின் தங்கலான் ரிலீஸ் தள்ளிக்கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது. ஜூன் 13ம் தேதி ராயன் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டதால், அதே தேதியில் வெளியாகும் என சொல்லப்பட்ட தங்கலான் கடைசி நேரத்தில் பின்வாங்கியது. மேலும் ஜூலை இறுதியில் தங்கலான் ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவித்தன. ஆனால் இப்போது மீண்டும் ராயன் படத்தின் புதிய ரிலீஸ் தேதியால் தங்கலான் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow