Soori: கருடனுக்காக சூரி எடுத்த ரிஸ்க்... இத்தனை கோடி கடனா..? அட பாவமே!

சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தால் சூரிக்கு பல கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Jun 10, 2024 - 18:17
Jun 11, 2024 - 11:11
Soori: கருடனுக்காக சூரி எடுத்த ரிஸ்க்... இத்தனை கோடி கடனா..? அட பாவமே!

சென்னை: காமெடியனாக பல படங்களில் நடித்து வந்த சூரி, இப்போது ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார். வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லீடிங் ரோலில் நடித்திருந்தார் சூரி. அப்போதே அவரது நடிப்புக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சூரி ஹீரோவாக நடித்த கருடன் திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. துரை செந்தில்குமார் இயக்கிய இந்தப் படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரும் சூரியுடன் நடித்திருந்தனர். இப்படத்தின் கதை முழுக்க சூரியின் கேரக்டரான சொக்கனை சுற்றி நடக்கும்படியே அமைந்திருந்தது.

முக்கியமாக கருடன் படத்தில் சூரிக்காக சில மாஸ்ஸான ஆக்ஷன் காட்சிகளும் இருந்தன. அதில் சூரியும் செம்மையாக ஸ்கோர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. நட்பு – துரோகம், விஷ்வாசம் – நியாயம் என இதனை பின்னணியாக வைத்து பக்கா கமர்சியல் மூவியாக உருவாகியுள்ளது. சூரியின் மிரட்டலான நடிப்புக்காகவே ரசிகர்களிடம் இப்படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் கருடன் படத்தின் ரிலீஸுக்காக சூரி ரிஸ்க் எடுக்க, அதனால் அவருக்கு பல கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதாவது 20 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் படத்தை முடிக்க வேண்டும் எனதயாரிப்பு தரப்பு முடிவு செய்திருந்ததாம். ஆனால், திடீரென பட்ஜெட் அதிகரித்துவிட்டதால் கடைசி நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியானால் தான் ஹீரோவாக தொடந்து நடிக்க ஸ்கோப் இருக்கும் என சூரியே படத்தின் ரிலீஸுக்கு பணம் ரெடி செய்து கொடுத்தாராம். அதன்படி 7 கோடி ரூபாய் வரை சூரியே சொந்தமாக கடன் வாங்கி கருடன் படத்தை ரிலீஸ் செய்ய உதவியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு பலனாக தான் கருடன் திரைப்படம் இப்போது சக்கைப் போடு போட்டு வருகிறது என கோலிவுட் வட்டாரத்தினர் கூறி வருகின்றனர். 

கடந்த மாதம் 31ம் தேதி ரிலீஸான கருடன், இதுவரை 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சூரியின் 7 கோடி ரூபாய் சேதாரம் இல்லாமல் அவரது கையில் திரும்ப கிடைத்துவிடும் என சொல்லப்படுகிறது. வடிவேலு, சந்தானம் வழியில் இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என சூரி முடிவு செய்துள்ளதால், இனி இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இன்று தனது சொந்த ஊரான மதுரையில் உள்ள பிரபல திரையரங்கில், ரசிகர்களுடன் சேர்ந்து கருடன் படத்தை பார்த்து ரசித்துள்ளார் சூரி. இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow