இந்தியா வந்துள்ள ரஷ்யா அதிபர் புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், ராணுவ அணிவகுப்புடன் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்தியா வந்துள்ள ரஷ்யா அதிபர் புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
Russian President Putin on his visit to India

இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு ரஷ்யா அதிபர் புதின் இந்தியா வருகைதந்தார்.அவர் இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வருகை தந்தார். அவரை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.

புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ராணுவ இசைக் கலைஞர்களின் இசையுடன் கூடிய ராணுவ அணிவகுப்பை புதின் பார்வையிட்டார். இதன் பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை திரவுபதி முர்மு, புதினுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதை தொடர்ந்து  புதினுடன் வருகை தந்துள்ள அந்நாட்டின் தூதுக்குழுவினரை புதின், திரவுபதி முர்முவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் கைகளை குலுக்கி, திரவுபதி முர்மு வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, மகாத்மா காந்தி நினை​விடத்​தில் அதிபர் புதின் அஞ்​சலி செலுத்​தினர். இதன்​ பிறகு டெல்​லி​யில் உள்ள ஹைத​ரா​பாத் இல்​லத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி​யும் அதிபர் புதினும் அதி​காரப்​பூர்​வ​மாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்​போது பாது​காப்​பு, அணு சக்தி, தொழில்​நுட்​பம், வர்த்​தகம், விண்​வெளி உள்ளிட்ட துறை​கள் தொடர்​பாக இரு நாடு​கள் இடையே 25 ஒப்பந்​தங்​கள் கையெழுத்து ஆனதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow