பூடான் பயணம் நிறைவு! டெல்லி திரும்பினார் மோடி...
பூடானின் உயரிய விருதை மரியாதை நிமித்தமாக பெற்றுக் கொண்டார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
பூடானின் உயரிய விருதை மரியாதை நிமித்தமாக பெற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக பூடான் சென்றார். அங்கு பரோ சர்வதேச விமான நிலையத்தில் அவரை, அந்நாட்டு அரசர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் பிரதமர் ஷேரிங் டோப்கே ஆகியோர் வரவேற்றனர். அதன்பின்னர் அந்நாட்டின் உயர்ந்த கௌரவ விருதான ஆர்டர் ஆஃப் தி ட்ருக் கியால்போ என்ற விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இதனை பூடானின் அரசர் மற்றும் பிரதமர் இருவரும் இணைந்து வழங்கினர். இரு நாடுகளின் உறவைப் பலப்படுத்தும் வகையில் வழங்கப்பட்ட விருதை, மரியாதை நிமித்தமாக பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் இவ்விருதை சமர்ப்பிப்பதாக எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.
தொடர்ந்து, பூடானில் இந்திய அரசின் நிதியில் கட்டப்பட்ட தாய் சேய் நல மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். முன்னதாக பூடான் வந்த மோடிக்கு, இந்திய வம்சாவளியினர் மற்றும் பூடான் மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு முன்பு, பூடான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பொருளாதாரம், வருங்கால தொழில் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தனி விமானம் மூலம் பூடானிலிருந்து புறப்பட்ட மோடி, டெல்லி வந்தடைந்தார்.
What's Your Reaction?