SBI வாடிக்கையாளரா நீங்கள்...இனி 4 முறைக்கு மேல பணம் எடுத்தா இது தான் கதி?

அக்டோபர் 1, முதல் SBI-யின் BSBD கணக்குகளில் மாதத்திற்கு 4 முறை பணம் எடுப்பது இலவசமாகவும், அதற்கு மேல் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கும் ரூ.15 + GST கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sep 29, 2026 - 12:52
Sep 29, 2026 - 12:57
SBI வாடிக்கையாளரா நீங்கள்...இனி 4 முறைக்கு மேல பணம் எடுத்தா இது தான் கதி?
State Bank of India

அக்டோபர் 1-ம் தேதி முதல் பாரத ஸ்டேட் வங்கி 4 இலவச பணப்பரிவர்த்தனைகளுக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய விதிமுறையை அமல்படுத்துகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்களிடையே கவனம் ஏற்பட்டுள்ளது.

Basic Savings Bank Deposit (BSBD) கணக்கு வைத்திருந்தால், மாதத்திற்கு 4 முறை பணம் எடுப்பது தொடர்ந்து இலவசமாக இருக்கும். அதற்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு கூடுதல் பணப்பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் அதனுடன் GST கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கு முன்பு பொதுத்துறை வங்கியான SBI ரூ.8 கட்டணமாக வசூலித்து வந்தது.

இந்நிலையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது: "ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி கிளை மூலம் தொடங்கப்பட்ட Basic Savings Bank Deposit (BSBD) கணக்குகளுக்கான பணம் எடுப்பதற்கான கட்டணங்களை 2026 அக்டோபர் 1-ம் தேதி முதல் மாற்றியுள்ளது.

இதன்படி, ஒரு மாதத்தில் 4 முறை பணம் எடுப்பது தொடர்ந்து இலவசமாக இருக்கும். 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.15 + GST கட்டணமாக வசூலிக்கப்படும்.

அதேநேரத்தில், அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி தொடர்ந்து இலவசமாக இருக்கும் என SBI தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொள்ளுமாறு வங்கி கேட்டுக்கொண்டுள்ளது." எஸ்பிஐ வெளியிட்டுள்ள குறிப்பில் இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண விதிமுறை வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

https://x.com/TheOfficialSBI/status/2090346021817913753?s=20

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow