நகை வாங்க நல்ல நேரம் வந்துவிட்டது மக்களே....இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
இன்று தங்கம் விலை குறைந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த (அக்.,-12) ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்து ஒரு சவரன் ரூ 1,10,720க்கும், கிராமுக்கு ரூ 40 குறைந்து ஒரு கிராம் ரூ 13,840க்கும் விற்பனையானது.
காலையில் குறைந்த தங்கம் விலை மாலையிலும் அதிரடியாக குறைந்தது. அதன்படி சவரனுக்கு ரூ 960 குறைந்து ஒரு சவரன் ரூ 1,09,760க்கும், கிராமுக்கு ரூ 120 குறைந்து ஒரு கிராம் ரூ 13,720க்கும் விற்பனையானது.
அதைத்தொடர்ந்து நேற்றும் (அக்.,-13)தங்கம் விலை அதிரடியாக குறைந்து காணப்பட்டது. அதன்படி சவரனுக்கு ரூ.280 குறைந்து 1,09,480-க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,685-க்கும் விற்பனையானது.
இன்றைய தங்கம் விலை
தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில், இன்றும் அதிரடியாக தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து 1,08,720-க்கும், கிராமுக்கு ரூ.95 குறைந்து ஒரு கிராம் ரூ.13,590-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.
What's Your Reaction?

