Sardar 2: அஜித் ரூட்டில் கார்த்தி... சர்தார் 2 ஷூட்டிங் அங்கேயா... பட்ஜெட் மட்டும் இத்தனை கோடி..?

கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

May 25, 2024 - 15:44
May 25, 2024 - 16:02
Sardar 2: அஜித் ரூட்டில் கார்த்தி... சர்தார் 2 ஷூட்டிங் அங்கேயா... பட்ஜெட் மட்டும் இத்தனை கோடி..?

சென்னை: கோலிவுட்டின் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வருகிறார் கார்த்தி. இன்று தனது 47வது பிறந்தநாளை கொண்டாடும் கார்த்திக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது 27வது படத்தின் டைட்டில் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பிரேம்குமார் இயக்கும் இந்தப் படத்திற்கு மெய்யழகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் கார்த்தியுடன் அரவிந்த் சாமியும் நடித்து வருகிறார். அதேபோல், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. இது கார்த்தியின் 26வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து கார்த்தி கமிட்டாகியுள்ள சர்தார் 2ம் பாகம் குறித்த அப்டேட்கள் வெளியாகியுள்ளன. 2022 தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான சர்தார் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. பிஎஸ் மித்ரன் இயக்கிய இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கார்த்தி அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் நடிக்க, பக்கா கமர்சியல் ஹிட் அடித்த சர்தார், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள கைதி 2ம் பாகத்திலும் கார்த்தி நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார்.

ஆனால், கைதி 2 தொடங்க இன்னும் தாமதமாகும் என சொல்லப்படுகிறது. அதற்கு முன்னதாக சர்தார் 2ம் பாகத்தில் நடிக்க ரெடியாகிவிட்டாராம் கார்த்தி. ஸ்க்ரிப்ட் வேலைகளை முடித்துவிட்ட இயக்குநர் பிஎஸ் மித்ரன், ப்ரீ புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார். அதோடு படப்பிடிப்பு நடத்த வேண்டிய லொக்கேஷன்களையும் முடிவு செய்துவிட்டாராம். அதன்படி சர்தார் 2 படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான், கஜகஸ்தான் நாடுகளில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் விடாமுயற்சி படம் முழுக்க அஜர்பைஜான் நாட்டில் தான் நடைபெறுகிறது. ஆனாலும் விடாமுயற்சி இன்னும் முடிவுக்கு வராததால், கார்த்தியையும் ரசிகர்கள் வார்னிங் செய்து வருகின்றனர்.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் சர்தார் 2 படப்பிடிப்பை அஜர்பைஜானில் நடத்தினால், படம் ட்ராப் ஆகிவிடப் போகிறது என ஜாலியாக கலாய்த்து வருகின்றனர். அஜர்பைஜான், கஜகஸ்தான் தவிர்த்து சென்னை, ஐதராபாத்தில் 3 பிரம்மாண்ட செட்கள் போட்டும் படப்பிடிப்பை நடத்தவுள்ளார்களாம். அதேபோல், கார்த்தி ஜோடியாக பாலிவுட்டில் இருந்து இரண்டு முன்னணி நாயகிகளை களமிறக்கவும் பிஎஸ் மித்ரன் முடிவு செய்துள்ளாராம். இதுபற்றியும் விரைவில் அபிஸியல் அப்டேட்ஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை மாதம் தொடங்கும் சர்தார் 2 ஷூட்டிங் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவுபெறும் எனவும், அடுத்தாண்டு சம்மர் ஸ்பெஷலாக ரிலீஸாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கார்த்தியின் கேரியரில் ஆயிரத்தில் ஒருவன், பொன்னியின் செல்வன் படங்களுக்குப் பின்னர் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் மூவியாக சர்தார் 2 இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow