Amaran: அமரன் ஷூட்டிங் ஓவர்... சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பிரியாணி ட்ரீட் ரெடி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தின் அபிஸியல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

May 25, 2024 - 13:49
Amaran: அமரன் ஷூட்டிங் ஓவர்... சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பிரியாணி ட்ரீட் ரெடி!

சென்னை: கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் லைன் அப்பில் அமரன், எஸ்கே 23 படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்கமல் பிலிம்ஸ், ராஜ்குமார் பெரியசாமி, ஜிவி பிரகாஷ் என முதன்முறையாக இணைந்துள்ள இக்கூட்டணி ரசிகர்களுக்கு தரமான ஆக்ஷன் ட்ரீட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லேஜ் கெட்டப், பிளேபாய் ஹீரோ என ஜாலியான கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன், அமரன் படத்தில் சீரியஸான அவதாரம் எடுத்துள்ளார். இந்திய ராணுவம் மேற்கொண்ட ஷோபியானின் காசிபத்ரி ஆபரேஷனில் வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோ பிக் மூவியாக அமரன் உருவாகியுள்ளது. இதில் மேஜர் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே அமரன் டைட்டில் டீசர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது.

சிவகார்த்திகேயன் முதன்முறையாக ஆர்மி ஆபிஸராக நடித்த படம் அமரன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமரன் ஷூட்டிங் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காஷ்மீர், மும்பை, சென்னை போன்ற பல லொக்கேஷன்களில் அமரன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இன்னொரு பக்கம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தின் ஷூட்டிங்கிலும் பங்கேற்று வந்தார் சிவகார்த்திகேயன். இதனிடையே நேற்று அமரன் படக்குழுவினருக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து கொடுத்த வீடியோ வைரலானது.

அப்போதே அமரன் ஷூட்டிங் முடிவுக்கு வந்ததால், படக்குழுவினருக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி ட்ரீட் கொடுத்ததாக சொல்லப்பட்டது. இதனால் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிக்கப்படலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில், அமரன் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக ராஜ்கமல் பிலிம்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அபிஸியலாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து அமரன் படத்தின் அப்டேட்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 

ஜூன் 1ம் தேதி கமல் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறுகிறது. அப்போது அமரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட் வெளியாகலாம். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ரிலீஸான அயலான் எதிர்பார்த்த அளவிற்கு ஹிட்டாகவில்லை. இதனால் அமரன் படத்தை அதிகம் நம்பியுள்ளார் எஸ்கே. கோலிவுட்டில் இந்தாண்டு வேட்டையன், இந்தியன் 2, கோட், விடாமுயற்சி, தங்கலான், கங்குவா என பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாகின்றன. எனவே அமரன் படத்தின் ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்வதில் படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow