Sivakarthikeyan: KGF கூட்டணியில் சிவகார்த்திகேயன்... சூர்யாவால் சுதா கொங்கரா எடுத்த அதிரடி முடிவு!

அமரன், SK 23 படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் புதிய ப்ராஜெக்ட் பற்றிய எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள் வெளியாகியுள்ளன.

May 25, 2024 - 17:21
Sivakarthikeyan: KGF கூட்டணியில் சிவகார்த்திகேயன்... சூர்யாவால் சுதா கொங்கரா எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்து வந்த அமரன் படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கும் எஸ்கே 23 படத்தில் பிஸியாகிவிட்டார் சிவா. ஆக்ஷன் ஜானரில் உருவாகும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கல் அல்லது கோடை விடுமுறையில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் தனது 24வது படத்துக்காக பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஏற்கனவே இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சிவாவின் 25வது படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த அப்டேட் வெளியான நாள் முதல் விஜய்யையும் சிவகார்த்திகேயனையும் ஸ்க்ரீனில் ஒன்றாக பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 24வது படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரரைப் போற்று வெற்றிக்குப் பின்னர் மீண்டும் சூர்யாவுடன் இணையவிருந்தார் சுதா கொங்கரா. அதன்படி சூர்யா 43 படத்தின் டைட்டில் போஸ்டர் கூட வெளியானது. ‘புறநானூறு’ என்ற டைட்டிலில் உருவாகவிருந்த இந்தப் படத்தில், சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா நஸிம், விஜய் வர்மா ஆகியோரும் நடிப்பதாக அபிஸியலாக அறிவிக்கப்பட்டது.

மேலும், இந்தப் படம் 1960களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அதோடு சூர்யா 43 ஷூட்டிங் மதுரையில் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், திடீரென இந்தப் படத்தை ட்ராப் செய்வதாக அறிக்கை வெளியிட்டார் சூர்யா. இதனால் அடுத்த ஹீரோவை தேடிக் கொண்டிருந்த சுதா, விக்ரமிற்காக ஒரு கதை கூறியிருந்தாராம். இதுபற்றி அபிஸியலாக அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது சிவகார்த்திகேயன் இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.

அதாவது சுதா கொங்கரா இயக்கவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுதா சொன்ன கதை என்கேஜிங்காக இருந்ததால் உடனே ஓக்கே கூறிவிட்டாராம் சிவகார்த்திகேயன். அதேபோல், இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஹோம்பலே பிலிம்ஸ் பேனரில் ஒரு படம் இயக்க கமிட்டாகியுள்ளார் சுதா கொங்கரா. அது சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow