குடும்ப பிரச்சனை காரணமாக சிறக்கடிக்க ஆசை சீரியல்  நடிகை தற்கொலை

குடும்ப பிரச்சனை காரணமாக கணவருடன் சண்டை போட்டு தாய் வீட்டுக்கு சென்ற சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

குடும்ப பிரச்சனை காரணமாக சிறக்கடிக்க ஆசை சீரியல்  நடிகை தற்கொலை
சிறக்கடிக்க ஆசை சீரியல்  நடிகை தற்கொலை

சென்னை பிராட்வே தாயப்பன் முதலி தெருவை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39). இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை உள்ளிட்ட பல்வேறு மெகா தொடரில் நடிகையாக நடித்து வருகிறார்.

நடிகை ராஜேஸ்வரி கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.‌ இவர்களுக்கு ஹேமந்த் குமார், என்ற மகனும், தணி என்ற மகளும் உள்ளனர்.. மகன் ஹேமந்த் குமார் ஓஎம்ஆர் சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். மகள் தணி பிராட்வே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.

இந்நிலையில் தனியார் எண்ணெய் கம்பெனியில் வேலை செய்து வரும் கணவர் சதீஷ்க்கும் நடிகை ராஜேஸ்வரிக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று கடந்த 7 ஆம் தேதி அன்று நடிகை ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் சதீஷ் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு மறுநாள் காலை நடிகை ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்து கொண்டு சைதாப்பேட்டை விஜிபி சாலையில் உள்ள தன்‌ தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

கடந்த மூன்று நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த நடிகை ராஜேஸ்வரி நேற்று இரவு தாய் வீட்டில் அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் மாத்திரைகளை சாப்பிட்ட சில நிமிடங்களில் நடிகை ராஜேஸ்வரி மயங்கி விழுந்தார்.‌ இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கிண்டியில் உள்ள கலைஞர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் நடிகைக்கு முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ராஜேஸ்வரி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சைதாப்பேட்டை போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சின்னத்திரையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow