Karthi 26: வெளியானது கார்த்தி 26 டைட்டில்... எம்ஜிஆர் லுக்கில் வைப் கொடுத்த கார்த்தி!

கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 26வது படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.

May 25, 2024 - 17:52
Karthi 26: வெளியானது கார்த்தி 26 டைட்டில்... எம்ஜிஆர் லுக்கில் வைப் கொடுத்த கார்த்தி!

சென்னை: கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படங்களின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் அவரது 27வது படத்தின் டைட்டில் நேற்று வெளியாகியிருந்தது. அதன்படி கார்த்தி 27 படத்துக்கு மெய்யழகன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கார்த்தியின் 26வது படத்தின் டைட்டிலையும் படக்குழு தற்போது அறிவித்துள்ளது. நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டில், வா வாத்தியார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்கள் மூலம், செம்ம வெரைட்டியான மூவி மேக்கர் என பெயரெடுத்தவர் நலன் குமாரசாமி. அவரது இயக்கத்தில் கார்த்தி நடிப்பதாக தகவல் வெளியானதுமே ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. மேலும், கார்த்தி ஜோடியாக க்ருத்தி ஷெட்டியும், லீட் ரோல்களில் சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரும் நடிக்கின்றனர். நலன் குமாரசாமியின் ஃபேவரைட் சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில், கார்த்தி 26 படத்தின் டைட்டில் வா வாத்தியார் என அறிவித்த படக்குழு, அதனுடன் கார்த்தியின் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.

அதில், எம்ஜிஆர் லுக்கில் செம்ம ஃபன்னியாக போஸ் கொடுத்துள்ளார் கார்த்தி. தனது முதல் படமான பருத்தி வீரன் முதல் காமெடி ஜானர் படங்களில் மாஸ் காட்டி வருகிறார் கார்த்தி. வா வாத்தியார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்க்கும் போது, இதிலும் கார்த்தி காமெடியில் ட்ரீட் கொடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு சத்யராஜ்ஜும் இந்தப் படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் படுதோல்வியடைந்தது. அதிலும் ஜப்பான், கார்த்தியின் 25வது படம் என்ற ப்ரோமோஷனோடு ரிலீஸானது.  

ராஜூ முருகன் இயக்கியிருந்த இந்தப் படம் கார்த்திக்கு ஏமாற்றத்தை கொடுத்ததால், வா வாத்தியாரை அதிகம் நம்பியுள்ளார். வா வாத்தியார், மெய்யழகன் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் கார்த்தி நடிப்பில் ரிலீஸுக்கு ரெடியாகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து சர்தார் 2, கைதி 2 என கார்த்தியின் கால்ஷீட் அடுத்தாண்டு வரை பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow