நகைப்பிரியர்களுக்கு சற்றே ஆறுதல் செய்தி: தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு

தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைந்து உள்ளது. இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்திருப்பது நகைப்பிரியர்களுக்கு சற்றே ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது. 

நகைப்பிரியர்களுக்கு சற்றே ஆறுதல் செய்தி: தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு
தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கடந்த வாரம் தங்கம் விலை கடும் விலை உயர்வை கண்டது. வெள்ளியும் விலை ஏற்றம் கண்டது. இது நகைப்பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. 

வார தொடக்க நாளான நேற்று  சவரனுக்கு ரூ.920 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,25,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கிராமுக்கு ரூ. 115 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,660 விற்பனை ஆனது. இதே போன்று வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.315-க்கு விற்பனை ஆனது. கிலோவிற்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,15,000 விற்பனை செய்யப்பட்டது.

இரண்டாவது நாளாக  இன்றும் தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,25,200-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.15,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியை பொறுத்தவரை விலை மாற்றமில்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow