தங்கத்தின் விலை சவரன் ரூ 480 குறைவு: வெள்ளி கிலோ ரூ. 3 ஆயிரம் குறைந்தது   

இரண்டு தினங்களாக ஏற்றம் கண்ட தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை இன்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ. 480ம், வெள்ளி கிலோ ரூ 3 ஆயிரமும் குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர். 

தங்கத்தின் விலை சவரன் ரூ 480 குறைவு: வெள்ளி கிலோ ரூ. 3 ஆயிரம் குறைந்தது   
Gold price falls by Rs 480 per kilogram

சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம்  மற்றும் வெள்ளியின் விலை நாள்தோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் வாரத்தின் தொடக்கத்தில் சவரன் 1 லட்ச ரூபாய் தொட்டது. இதன் பிறகு சற்றே குறைந்த தங்கம் அதன் பிறகு மீண்டும் கடந்த இரண்டு நாட்களாக உயர தொடங்கியது. 

இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,380-க்கும், சவரன் ரூ.99,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் மேலும் உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.221-க்கும். ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி கிலோ நேற்றைய தினம் கிலோ 4 ஆயிரம் ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று 3 ஆயிரம் ரூபாய் விலை குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று சற்றே குறைந்து முதலீட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை சற்றே ஆறுதல் அடைய செய்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow