'சூப்பர் சிங்கர் 10' விரைவில் ஆரம்பம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் திறமைசாலிகள் பங்கேற்று பல நிலைகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Dec 15, 2023 - 15:46
'சூப்பர் சிங்கர் 10' விரைவில் ஆரம்பம்

விஜய் டி.வி.யில் சூப்பர் சிங்கர் சீசன் 10  டிச.16ம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது. 

சூப்பர் சிங்கர் இசை ரியாலிட்டி ஷோ புத்தம் புதிய சீசன் தொடங்க உள்ளது.இந்த பாடும் திறமைக்கான நிகழ்ச்சி டிச.16ம் தேதி முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாள் முதல் இந்த நிகழ்ச்சி மக்களிடையே எப்போதுமே சிறந்ததாகவே இருந்து வருகிறது. பல வெற்றிகரமான சீசன்களுக்குப் பிறகு, இந்த பிரம்மாண்ட மேடையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இளம் பாடும் திறமை வாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் இந்த மேடையில் பாடும் வாய்ப்பை விஜய் டி.வி. வழங்கி வருகிறது.  

போட்டியாளர்களாக பங்கேற்றவர்களுக்கு உரிய அங்கீகாரமும், பிரபல அந்தஸ்தையும் இந்த நிகழ்ச்சி வழங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியிட்ட சூப்பர் சிங்கர் திறமைகள் திரையுலகில் முன்னணி பின்னணிப் பாடகர்களாகவும், உலகெங்கிலும் உள்ள பல நிகழ்வுகளில் பங்கேற்று நட்சத்திரங்களாகவும் ஜொலிக்கின்றனர்.

முந்தைய சீசன்களின் வெற்றியாளர்களுக்கு பிரபல இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா, டி.இமான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் ரவிச்சந்திரன், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் தமன் ஆகியோரின் இசையமைப்பில் பாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. 
 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் திறமைசாலிகள் பங்கேற்று பல நிலைகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சூப்பர் சிங்கர் சீசன் 10ல் புகழ்பெற்ற பின்னணி பாடகர்களான மனோ, சுஜாதா, அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் நடுவர்களாக இடம்பெறுவர் என கூறப்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow