GOAT BoxOffice: பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் விஜய்யின் கோட்... மொத்த வசூல் இத்தனை கோடியா..?
விஜய் நடித்துள்ள கோட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, ஜெயராம் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான கோட் படத்துக்கு முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்தது. இதனால், இத்திரைப்படம் முதல் நாளில் 126 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
விஜய் கெரியரில் அவரது லியோ திரைப்படம் முதல் நாளில் 142 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. அதனை கோட் மூவி மிஸ் செய்திருந்தாலும், வசூலில் ஓரளவு தாக்குப் பிடித்தது. கோட் படத்துக்கு முதல் நாளில் கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் நெகட்டிவாகவும் ட்ரோல்கள் வந்தன. ஆனாலும் விஜய்யின் கோட் பக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து மாஸ் காட்டி வந்தது. இதனால் முதல் வாரம் முடிவுக்குள் சுமார் 300 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்தது கோட்.
இந்நிலையில், கோட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படம் 13 நாட்களில் 413 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக அப்டேட் கொடுத்துள்ளது. முன்னதாக விஜய்யின் லியோ 600 கோடிக்கும் அதிகமாக கலெக்ஷன் செய்திருந்தது. அதனையடுத்து கோட் திரைப்படம் தான் 400 கோடி வசூலை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் கோட், பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி வரை கலெக்ஷன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு வெளியான தமிழ்ப் படங்களில் அரண்மனை 4, மகாராஜா, ராயன், தங்கலான் படங்கள் மட்டுமே 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தன. ரஜினியின் லால் சலாம், கமல் – ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2 படங்கள் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸிலும் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் கோட் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், இதுவரையிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரப்படி கோட் படத்துக்கு போட்ட முதல் கிடைத்துவிட்டதாகவே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?