தமிழ்நாடு என்றாலே சாதனை… சாதனை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
திமுக ஆட்சியில் தமிழகம் இரட்டை இலக்க வளர்ச்சி எட்டியுள்ளதை, முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"திராவிட மாடல் ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது நம் தமிழ்நாடு. இது சாதாரண வளர்ச்சி அல்ல, திட்டமிட்ட முன்னேற்றம் என்பதையே இது நிரூபிக்கிறது. இதுவே அனைவரையும் உள்ளடக்கிய பரவலாக்கப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி" என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில்; "தமிழ்நாடு என்றாலே சாதனை! சாதனை! சாதனை! திராவிட மாடல் தனித்துவமான மாடல்! சொன்னதை, எண்களிலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்! முதல் மூன்றாண்டுகளில் அடித்தளம் அமைத்து, இப்போது தொடர்ந்து இரண்டாண்டுகளாக இரட்டை இலக்க வளர்ச்சி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளோம். சிறப்பான நமது நிர்வாகத்திற்கு, உழைப்பால் துணை நின்ற தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!
இது தொடக்கம்தான். உங்கள் துணையோடு இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! நம்முடைய போட்டி என்பது மற்ற இந்திய மாநிலங்களுடன் அல்ல; தெற்காசியாவில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு உயர வேண்டும்!" எனவும் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?