நகை வாடிக்கையாளர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு?..அதிரடி சரிவில் தங்கம் விலை..!

சென்னையில் தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ள நிலையில், தங்க நகைகள் வாங்கக் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Oct 23, 2026 - 10:02
நகை வாடிக்கையாளர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு?..அதிரடி சரிவில் தங்கம் விலை..!
today gold rate

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், கடந்த 20-ம் தேதி முதல் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. நேற்று (அக்.22) ஒரு சவரனுக்கு ரூ.1,240-ம், ஒரு கிராமுக்கு ரூ.155-ம் குறைந்தது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,05,880-க்கும், ஒரு கிராம் ரூ.13,235-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,400 குறைந்து, ரூ.1,04,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.175 குறைந்து, ரூ.13,060-ஆக உள்ளது.
கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,080 குறைந்துள்ளது நகை வாங்கத் திட்டமிடுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை!

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.225-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,25,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow