சூர்யவன்ஷியின் பேட்டில் AI சிப்: ஆய்வு செய்ய கிரிக்கெட் நிபுணர் கோரிக்கை
இளம் கிரிக்கெட் வீரர் சூர்யவன்ஷி பேட்டில் AI சிப்பை பயன்படுத்துவதால் தான் அதிரடியாக ஆடுகிறார். அவரது பேட்டை ஆய்வு செய்ய வேண்டும் என கிரிக்கெட் நிபுணர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பீகார் மாநில அணிக்காக 12 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷி ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடி சாதனை படைத்தார்.13 வயதிலேயே ஐபிஎல் அணியால் ஏலத்தில் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடி வரும் அவர் தனது அதிரடி ஆட்டத்தால் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார். தனது முதல் ஐபிஎல் போட்டியில், தான் சந்தித்த முதல் பந்திலேயே வைபவ் சூர்யவன்ஷி சிக்ஸர் அடித்தார்.
தற்போது வரை உலகின் அத்தனை முக்கிய பந்துவீச்சாளர்களின் பந்துகளையும் அடித்து ஆடி வருகிறார். சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 36 பந்துகளில் அவர் சதமடித்தது புதிய சாதனை படைத்தார். இந்த நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் நிபுணரான நௌமேன் நியாஸ் என்பவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, உங்களுக்கு 18 வயதாக இருக்கும்போது உங்களால் இதுபோன்ற ஒரு ஆட்டத்தை ஆடமுடியாது என்றும், சூர்யவன்ஷியிடம் சக்தி வாய்ந்த ஆட்டத்தை விட நுட்பம்தான் அதிகம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரின் ஆட்டம் அசாதாரணமானது என்றும் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனைகளை நடத்துவது போல, சூர்யவன்ஷியின் பேட்டை ஒரு ஆய்வகத்திற்கு அனுப்பவேண்டும் என்றும் கூறியுள்ளார். அதோடு அவர் தனது பேட்டில் ஒரு செயற்கை நுண்ணறிவு சிப்பைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அதன் மூலமே இதுபோன்ற சக்திவாய்ந்த ஷாட்களை அவர் ஆடுகிறார் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பாக் கிரிக்கெட் நிபுணரின் இந்த கருத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய கிரிக்கெட் நிபுணர்கள் பாக் நிபுணர் கருத்திற்கு கடும் கண்டனங்கள் பதிவு செய்து வருகின்றனர்.
What's Your Reaction?