போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி
போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் ஒரு ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம வேலை சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பகுதி நேர ஆசிரியர்கள் ஆறாவது நாளாக இன்று சென்னை எழும்பூரில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை தடுத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் பல்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பகுதியினர் கிருஷ்ணா மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்தனர். அதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் அண்ணன் என்பவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்தார்.
பூச்சி மருந்து குடித்த ஆசிரியர் கண்ணனை போலீசார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆசிரியர் ஒருவர் தற்கொலை முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?

