என்னை வாழ வைத்த மக்களுக்காவே அரசியலுக்கு வந்தேன் -  விஜய்

 மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று ஏமாற்றுகிறீர்கள்.

Oct 27, 2024 - 20:54
என்னை வாழ வைத்த மக்களுக்காவே அரசியலுக்கு வந்தேன் -  விஜய்

நாம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சுயநலம். என்னை வாழ வைத்த இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்தேன் என விஜய் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார் நடிகர் விஜய். இதைத்தொடர்ந்து 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். பின்னர் பேசிய தவெக தலைவர் விஜய்,  நம்மைப் பார்த்து யாரும் ‘விசிலடிச்சான் குஞ்சு’ என்று சொல்லிவிடக் கூடாது. நாம் செயல்படுவதை பார்த்து வேகமானவர்கள், விவேகமானவர்கள் என்று சொல்ல வேண்டும். அரசியல் வேண்டாம் என்று ஆரம்பத்தில் நினைத்தேன்.ஆனால் நாம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது சுயநலம். என்னை வாழ வைத்த இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்தேன்.

சில விஷயங்களில் பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், இறங்கி அடித்தால் தான் நம்மை நம்புகிறவர்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று தோன்றியதால் அரசியலுக்கு வந்தேன்.ஊழல் செய்பவர்கள் தான் நம்மை ஆண்டு கொண்டும் இருக்கிறார்கள்.... Yes. I repeat..."
நமக்காக இருக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென எனக்குள்ளே கேள்வி எழுந்தது. கேள்விகளின் விளைவாக எழுந்ததே எனது அரசியல் முடிவு. எதிரிகள் இல்லாத வெற்றி வேண்டுமானால் இருக்கலாம்.ஆனால் களம் இருக்க முடியாது.அந்த களத்தில் நம்முடைய வெற்றியை தீர்மானிப்பது நமது எதிரிகள் தான். எங்களின் கொள்கை நிலைப்பாடு என்பது எதார்த்தமானதாக இருக்க வேண்டும். அரசியல் தெளிவுத்தான் எங்களுடைய நிர்வாக செயல்முறையாக இருக்கும்.

அரசியலில் நமது நிலைப்பாடு என்ன என்பது உறுதியானால் எதிரிகள் தெரிவார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற போதே எதிரிகள் உறுதியாகிவிட்டனர். நண்பா,.. நம்பி,.. என்று சொல்லி.. பின் ..sorry தோழர்,. தோழிகளே என விஜய் சொன்னதால் மாநாடு கூட்டத்தில் கரகோஷம் எழுந்தது.தொடர்ந்து பேசிய அவர், பிளவுவாத சித்தாந்தம் மட்டுமல்ல, ஊழல் அரசியலும் நமது எதிரி தான். பிளவுவாத சித்தாந்த எதிரிகள் நம் கண்ணுக்கு தெரிவார்கள். மேலும், ஊழல் என்ற முகமூடி வேஷம் போட்டிருப்பவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம்மை ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். நமது ஒரு எதிரி பிளவுவாதிகள், மற்றொரு எதிரி ஊழல் கபடதாரிகள். எங்களை ஏ டீம், பி  டீம் என்று  பிரிச்சுடலானு நினைக்காதீங்க என தெரிவித்தார்.

மேலும், ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்கு தெரியாமல் வருவார்கள். மகத்தான அரசியல் என்றால், மக்களுக்கான அரசியல் தான். எப்போ பாத்தாலும் பாசிசம்.. பாசிசம்னு சொல்லிகிட்டு.... இல்லை நான் தெரியாம தான் நா கேக்குறேன்.அவங்க பாசிசம்னா அப்போ நீங்க என்ன பாயாசமா? என கேள்வி எழுப்பினார்.  தொடர்ந்து பேசிய அவர்,  மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று ஏமாற்றுகிறீர்கள். திராவிட மாடல் என்று சொல்லி தந்தை பெரியார் பெயரையும், அண்ணா பெயரையும் பயன்படுத்தி தமிழகத்தை சுரண்டி கொள்ளை அடிக்கிற குடும்ப சுயநலக் கூட்டம்தான் முதல் எதிரி என காட்டமாக தெரிவித்தார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow