ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி 
இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நேற்று முல்லன்பூர் மைதானத்தில் டைபெற்றது.

 முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 564 ரன்கள் குவித்து தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அதன்பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதரை சமாளிக்க முடியாமல் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாலோ ஆன் ஆனதாதை தொடர்ந்து அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி 112 ரன்களுக்கு அனைத்து விட்டு விடையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, கேப்டன் சுப்மன் கில் (126 ரன்கள்), விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (81 ரன்கள்) மற்றும் சாய் சுதர்சன் (81 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வாஷிங்டன் சுந்தர் 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

 23 வயதான மானவ் சுதர், 22 ஓவர்கள் வீசி 10 மெய்டன்களுடன் வெறும் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை பொறுத்தவரையில் தனியாளாக அசத்திய முகமது சலீம் சஃபி அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளராக சாதனை படைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow