ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sep 20, 2024 - 15:07
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்
rajasthan royals

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு வந்த விக்ரம் ரத்தோர், அடுத்து வரவிருக்கிற 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியை வழிநடத்தியபோது, விக்ரம் ரத்தோர் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். விக்ரம் ரத்தோர் முன்பு இந்திய அணிக்காக 3 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேனாக களம் கண்டுள்ளார். திறமையான பேட்ஸ்மேன் ஆன விக்ரம் ரத்தோரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இது குறித்து அவர்கள் கூறுகையில்... 

ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோரை நியமிப்பது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியதால்தான் நியமித்துள்ளோம் எனத் தெரிவித்திருக்கின்றனர். விக்ரம் ரத்தோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ள இந்த முடிவு மிகவும் சரியானது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இம்முடிவு குறித்து ராகுல் டிராவிட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் “பல ஆண்டுகள் நானும் விக்ரம் ரத்தோரும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். இந்திய ஆடுகளங்களைப் பற்றி அவருக்கு மிக ஆழமான புரிதல் இருக்கிறது. ஆகவே அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படுவது அணிக்கு பலமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவரது அனுபவம் கண்டிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து விக்ரம் ரத்தோரிடம் கேட்டதற்கு “ராஜஸ்தான் ராயல்ஸ் குடும்பத்தில் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக மீண்டும் ராகுல் டிராவிட்டுடன் இணைந்து பணியாற்றவுள்ளதை நினைக்கையில் மிகவும் மகழ்ச்சியாக உணர்கிறேன். எனது இத்தனை ஆண்டு கால அனுபவங்களைக் கொண்டு அணியை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லக் காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். 

விக்ரம் ரத்தோர் இந்திய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்ட 2019 ஆம் ஆண்டிலிருந்து 2023 வரையிலான கால கட்டத்தில் இந்திய வீரர்கள் பலரது திறனை மேம்படுத்தியிருக்கிறார். குறிப்பாக ரிஷப் பந்த், ஷுப்மன் கில் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற பேட்ஸ்மேன்களின் பேட்டிங் திறனை மேம்படுத்தியதில் விக்ரம் ரத்தோருக்கும் பயிற்சி உதவியது என்று கூறலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow