கே.எல்.ராகுல் நீக்கம் : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதியில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Feb 29, 2024 - 17:50
கே.எல்.ராகுல் நீக்கம் : பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டிற்கான இந்திய அணியில் இருந்து கே.எல். ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் மார்ச் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எட்டாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து, புள்ளிகளை ஈட்டும் பொருட்டு டெஸ்டை வெல்ல முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில். காயம் காரணமாக விலகியுள்ள ராகுல், லண்டனில் சிகிச்சை எடுத்து வருகிறார். கடந்த டெஸ்டில் ஓய்வளிக்கப்பட்ட பும்ரா, துணை கேப்டனாக அணியில் மீண்டும் இணைந்துள்ளார். மும்பைக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதியில் பங்கேற்பதற்காக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஐந்தாவது டெஸ்டுக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜுரேல், கேஎஸ் பரத், தேவ்தத் படிக்கல், ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow