மகளிர் தினத்தில் நள்ளிரவில் மத்திய அரசு கொடுத்த பரிசு: சமையல் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு

சமையல் சிலிண்டர் விலையை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர் தின பரிசாக நள்ளிரவில் விலை ஏற்றம் செய்திருப்பதாக மத்திய அரசு மீது கடுமையாக எதிர்கட்சிகள் சாடி வருகின்றன. 

மகளிர் தினத்தில் நள்ளிரவில் மத்திய அரசு கொடுத்த பரிசு: சமையல் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு
சமையல் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. இந்நிலையில், 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு நள்ளிரவில் திடீரென ரூ.60 உயர்த்தி இல்லதரசிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தலைநகர் டெல்லியில் 835 ரூபாய்க்கு விற்ற கியாஸ் சிலிண்டர் 913 ரூபாய்க்கு விற்பனை ஆகிது. இதன் மூலம் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.

ஈரான் உடனான போர் பதற்றம் காரணமாக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது என கூறிய நிலையில், நள்ளிரவில் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மகளிர் தினத்திற்கு ரூ.60 உயர்த்தி மத்திய அரசு மகளிருக்கு பரிசு கொடுத்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow