விசைப்படகு என்ஜினால் வலையைக் கிழித்து அட்டூழியம் - ரூ.30 லட்சம் இழப்பு... தமிழக மீனவர்களை துரத்தும் சோதனை ...
நாகை மாவட்டம் தோப்புதுறை அருகே ரூ.30 லட்சம் மதிப்பிலான வலைகள் கிழித்து சேதப்படுத்தப்பட்டதாக தமிழ்நாடு மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டம் செருதூரைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் 50க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். தோப்புதுறை அருகே 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் வலைவிரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, காரைக்காலைச் சேர்ந்த அதிவேக என்ஜின் கொண்ட விசைப்படகுகள், செருதூர் மீனவர்களின் வலைகளை கிழித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து 7 பேருக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட வலைகள் கிழிக்கப்பட்டதால், ரூ.30 லட்சம் மதிப்பிலான வலைகளை பறிகொடுத்துவிட்டு வெறுங்கையுடன் தமிழ்நாடு மீனவர்கள் கரைதிரும்பினர்.
இந்நிலையில் அப்பகுதியில் இருந்து உயிர்பிழைத்து வருவதே பெரும் பாடாகி விட்டது என பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்ட புதுச்சேரி மாநிலம் காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகை மீன்வள அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் படிக்க :
What's Your Reaction?