திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு செவ்வாய்கிழமை ஒத்தி வைப்பு : மதுரை உயர்நீதிமன்றம்
திருப்பரங்குன்ற தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பை வழக்கை வரும் செவ்வாய்க்கிழமை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒத்தி வைத்தார்.
கார்த்திகை தீபத்தையொட்டி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், இரு அமர்வு நீதிபதிகள் வழக்கை விசாரித்து தள்ளுபடி செய்தனர்.
நேற்று மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்ற மலையில் உள்ள தீபத்தூனில் தீபம் ஏற்றுவதோடு, இன்று காலை 10.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாமல் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீதான அவதூறு வழக்கு விசாரணை வந்தது. அப்போது வழக்கை செவ்வாய்க்கிழமை ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொள்வதாக ஒத்தி வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் விவகாரம்
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. திமுகவின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினர். திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் தொடர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்நோக்கத்துடன் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சபாநாயகர் இருக்கை அருகே சென்று திமுக மற்றும் கூட்டணி எம்.பிக்கள் கடுமையாக கோஷமிட்டு எழுப்பினர்
What's Your Reaction?

