தமிழில் சென்டம் எடுத்த 8 தங்கங்கள்.. கணக்கில் 100க்கு 100 எத்தனை பேர் தெரியுமா?
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்தில் 8 பேர் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.
2023 – 2024 ஆம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதும் 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதினர். 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்கள், 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 மாணவிகள் தேர்வு எழுதினர்.
இந்த நிலையில் இன்று (மே 10) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 30,646 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். அதிகபட்சமாக கணிதப் பாடத்தில் 20,691 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
அறிவியல் பாடத்தில் 5,104 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 4,428 பேரும் ஆங்கிலப் பாடத்தில் 415 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும், தமிழ் பாடத்தில் 8 மாணவ தங்கங்கள் சென்டம் எடுத்து அசத்தியுள்ளனர்.
அதேபோல், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 12,625 பள்ளிகளில் 4,105 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் 1,364 அரசுப் பள்ளிகள் 100% சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்துள்ளன.
What's Your Reaction?