திருப்பரங்குன்றம் வழக்கு: தூண் இருக்கும் இடம் தர்காவிற்கு சொந்தம் : நீதிமன்றத்தில் காரசார விவாதம்
திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தூண் இருக்கும் இடம் தர்காவிற்கு சொந்தமானது என வக்பு வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் 3-வது நாளாக காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று 3-வது நாளாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று காலை இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞர் வெளியேற்றம் செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீடு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது. வழக்கறிஞரை CISF வீரர்களை வைத்து நீதிபதிகள் வெளியேற்றினர். வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து திருப்பரங்குன்றம் வழக்கில் 3-வது வாதம் இன்று தொடங்கியது. அதில் வக்பு வாரியம் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தர்கா உள்ளது. அதன் அருகில் தொழுகை நடந்து வருகிறது. அதுவும் அங்கு ஒரு வழக்கமாகவே இருந்து வருகிறது.என வக்பு வாரிய வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மலை உச்சியின் இரு இடங்களில் என்னென்ன வழிபாட்டுத்தலங்கள் உள்ளன என கேள்வி எழுப்பினர்.
நெல்லித்தோப்பு மற்றும் அதுசார்ந்த பாதைகள், அவ்விடத்திற்கு செல்லும் படிக்கட்டுகள் தர்கா நிலங்கள் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதையெல்லாம் தனிநீதிபதி சுவாமிநாதன் கவனத்தில் கொள்ளவில்லை வக்பு சார்பில் பதிலளிக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அமைந்துள்ள ஒரே பாறையில் தர்கா குதிரைச்சுனை அததையொட்டி தூண் உள்ளது. தூண் அமைந்திருக்கும் இடம் தர்காவிற்கு சொந்தமானது எனவும் வக்புவாரியம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
What's Your Reaction?

