This Week OTT Release: Fighter முதல் Oppenheimer வரை… இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் லிஸ்ட்

இந்த வாரம் மார்ச் 22ம் தேதி ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

Mar 20, 2024 - 17:45
This Week OTT Release: Fighter முதல் Oppenheimer வரை… இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் லிஸ்ட்

ஓடிடி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விழாவில் 7 விருதுகளை வென்று சாதனை படைத்திருந்தது ஓப்பன்ஹெய்மர். சிறந்த திரைப்படம், நடிகர், துணை நடிகர், இயக்குநர் உட்பட 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. அணுகுண்டு ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் பயோபிக் மூவியாக வெளியான இந்த மூவி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இந்நிலையில், தற்போது Jio Cinema ஓடிடி தளத்தில் நாளை (மார்ச் 21) முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. 

அதேபோல், பாலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த ஃபைட்டர் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகிறது. ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே நடிப்பில் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் ஜானர் மூவியாக உருவான ஃபைட்டர், விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டியிருந்தது. ஆக்‌ஷன் மூவி ரசிகர்களுக்கான ஃபைட்டர்  22ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. 

மலையாள சினிமா ரசிகர்களுக்கு இந்த வாரம் ஜெயராம் நடிப்பில் வெளியான ஆபிரஹாம் ஓஸ்லர் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. சீரியல் கில்லரை பின்னணியாக வைத்து இன்வெஸ்டிகேஷன் ஜானர் படமாக உருவான இது, மலையாளத்தில் 40 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது. மம்முட்டியும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆபிரஹாம் ஓஸ்லர் திரைப்படம் இன்று முதல் ஹாட்ஸ்டார் டிஸ்னி ப்ளஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. 

தமிழில் மறக்குமா நெஞ்சம் திரைப்படம் இந்த வாரம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. விஜய் டிவி புகழ் ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் ஓடிடி ரசிகர்களிடம் கவனம் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ரஜினியின் லால் சலாம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால், அதுபற்றி அபிஸியலாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் Homicide டாக்குமெண்ட்ரி, 3 Body Problem என்ற வெப் சீரிஸ், Blessed You, Physical 100 வெப் சீரிஸ் சீசன் 2 ஆகியவை இந்த வாரம் வெளியாகின்றன. அதேபோல், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் Evermoor வெப் சீரிஸ், Anatomy Of A Fall, Lootere வெப் சீரிஸ் ஆகியவை இந்த வாரம் வெளியாகின்றன. தற்போதைய நிலவரப்படி ஃபைட்டர், ஓப்பன்ஹெய்மர், ஆபிரகாம் ஓஸ்லர் ஆகிய படங்களுக்கு ஓடிடியில் அதிகமான வீவ்ஸ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow